11/14/2018
யாழி என்றால் என்ன ?
தமிழனின் தொல்லுயிர் எச்சம்(fossil) பற்றிய அறிவுத்திறன் ஓலைகளாக நம் மொழியின் தொன்மையை உணர்த்தும் விதமாக பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்திருந்த போதிலும் கடந்த சொற்ப நூற்றாண்டுகளாக சமயம் என்ற கொடுஞ்செயலால் அழிக்கப்பட்டு எல்லாம் அவன் செயல் என தன் தவறை தானே சொன்னாலும் அதை நம்ப மறுக்கும் அளவுக்கு நம்மை மாற்றிய இவர்களின் புத்திக்கூர்மையை கண்டு வியக்கவேண்டியுள்ளது. ஒவ்வொரு தவறுக்கும் ஏதாவது தடம் அதனை செய்தவானால் விடப்பட்டிருக்கும், இப்படித்தான் இந்துத்துவா என்ற கொள்கைக்குள் ஞானசம்பந்தம் என்ற கொடூரபுத்தி கொண்ட ஒருவன் அமணர்கள் என்ற சமணர்களை அழித்து தன் பாடலில் காம வெறியாட்டம் காட்டி கடவுள் என கபடமற்ற நம்மவரின் மூலைகளில் தன் இன வளர்ப்பிற்கு வித்திட்டான். அதோடில்லாமல் நம் தாய் போன்ற மொழி தமிழ் மொழி அழிப்பையும் நம் மக்களை தீண்டாமை போன்ற தன் வெறியாட்டங்களுக்கு இரையாக்கினான். நான் சொல்வதெல்லாம் உண்மையா என கேள்விகேட்க்கும் உங்கள் அறிவே நம் முன்னோர்களின் கூர்மையான அறிவுத்திறனின் மீதமுள்ள சொச்சமே!
இதோ இன்னுமொரு தப்பிய துப்பாய் அழித்தவனின் கண்களுக்கு கற்பூரம் காட்டிவிட்டு கம்பீரமாய் நிற்கும் நமது தொல்லுயிர் எச்சம் பற்றிய அறிவுத்திறனே இவர்களின் கோவிலின் மண்டபங்களில் யாளியாய் நிற்கிறது. யாளி என்றால் என்னவாயிருக்கும் ஏன் இந்த இந்து புராணங்களின் எந்த அத்தியாயமும் இதை பற்றி எதுவும் கூறவில்லை? ஆனால் எப்படி தமிழ் நாட்டு கோவில்களில் மட்டும் இந்தவித சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன ? இது பற்றி என்றாவது சிந்தித்துளீர்களா ? இதுவும் முருகன், மதுரைவீரன், முனியாண்டி, சுடலை, கருப்பண்ணசாமி, அய்யானார் போன்று இந்து கடவுள்கள்தான் ஆனால் கடவுள்கள் இல்லை என வடஇந்திய இந்துக்கள் கூறும் நகைப்புக்குரியதானதா? அதெப்படி ஒரே மதத்தில் வடக்கிலும் தெற்கிலும் வெவ்வேறு கடவுள்கள், கொள்கைகள்? தென்னிந்திய கடவுள்கள் மாமிச உண்ணிகள் ஆனால் வடக்கிலிருந்து வந்த கடவுள்கள் தாவரயுண்ணிகள்! வடக்கிலிருந்து வந்த இவர்களை ஆரியர்கள் என அடையாளம் கண்டால் இந்த மத்தியகிழக்கு ஆசியர்களின்/கிழக்கு ஐரோப்பியர்களின் வாழ்வும் கைபர்கொலன் கணவாய்களை கடப்பதற்கு முன் பாலைவனங்களுக்குள்ளாகவே இருந்தது. அங்கு மாமிசம் கிடைத்திருக்க வழியில்லாததால் தாவரயுண்ணிகளாயினர். இந்த பிறவிகள் இப்போது தன் கை ஓங்கி இருப்பதாய் நினைத்து இந்த நாட்டில் எல்லோரையும் தாவரயுண்ணிகளாக்க பகல்கனவு காண்கின்றனர். சரி இப்போது சொல்கிறேன் யாளி என்றழைக்கப்படும் இந்த விந்தையான உருவம் கொண்ட விலங்குகள் வேறொன்றுமில்லை நம் குழந்தைகள் நன்கு அறிந்த டைனோசர் எனப்படும் தொல்லுயிர் பிராணிகளே!
இப்போதுதுள்ள குழந்தைகள் நம்மை விட சற்று நேரத்தை அதிகமாக கணினியில் செலவிட்டாலும் அந்த கணினியின் வாயிலாக அவர்கள் பெற்ற சில விடயங்களில் ஒன்றே டைனோசார் எனப்படும் தொல்லுயிர் பிராணிகளை பற்றிய அறிவாகும். இந்த உலகில் வாழ்ந்த மிகப்பெரிய விலங்குகளில் பல தாவர உண்ணிகளாக வளம் வந்தன அப்படிப்பட்ட தாவர உண்ணிகளை தொடர்ந்தே மாமிச உண்ணிகளும் சென்றன. இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் அவ்வளவு பெரிய தாவர உண்ணிகளுக்கு தேவையான உணவு கண்டிப்பாக பாலைவனம் சார்ந்த இடங்களில் கிடைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. ஆரியர்கள் எனப்படும் இந்த மத்தியகிழக்கு ஆசியர்களின்/கிழக்கு ஐரோப்பியர்களின் வாழ்வும் கைபர்கொலன் கணவாய்களை கடப்பதற்கு முன் பாலைவனங்களுக்குள்ளாகவே இருந்தது. அப்படியெனில் இவர்களுக்கு இந்த பெரிய விலங்குகளை பற்றிய அறிவு இருந்திருக்க எந்தவொரு வாய்ப்பும் இல்லை.
கிழே உள்ள படத்தினை பாருங்கள் உங்கள் குழந்தைகளின் விருப்பத்திற்குண்டான டைனோசர் மற்றும் யாளியின் அங்க அடையாளங்கள் உங்களுக்காக ஒப்பிடப்பட்டுள்ளது. ஓலைகளை அழித்தோ திருடியோ நம் அறிவியல் அறிவினை தனதென கூறும் இந்த மடையர்களுக்கு அப்போது புரியவில்லை எனது தமிழ் சிற்பிகள் தாங்கள் கற்ற அறிவியலை கல்லில் எதிரியின் கோவிலுக்குள்ளேயே வைத்து நம் அறிவியல் செல்வங்களை ஆரியர்களை வைத்தே காத்திட செய்தார்கள். தமிழ் தாத்தாக்களுக்கு தெரியும் என்றோ ஒருநாள் தன் பேரன்கள் ஆரிய மோகத்தினை உடைத்தெறிந்து உண்மையை கண்டுபிடிக்க துப்பு தேவைப்படும் என்று, அதற்கே அதற்காக யாழிகளை விட்டு சென்றிருக்கிறார்கள். இவை தமிழனுடையதல்லாமல் வந்தேறிகளின் ஞானாமாயிருந்திருந்தால் வடக்கிலுமல்லவா இருந்திருக்கும், பொய்யர்களின் சுவாகாவாகாமல் கம்பீரமாய் எங்கள் யாழி, தமிழனின் தமிழின் தொன்மையை பறைசாற்றுகிறது
குமரி கண்டம்
சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப...

-
பாரி கடை ஏழு வள்ளல்களில் ஒருவர்.இவர் ஒரு குறுநில மன்னர், வேள் என்ற வம்ச வழி வருபவர்கள். எனவே பாரிவேள் என்று அழைப்பது உண்டு.இவரதுக்காலம் கி....
-
மும்முடிச் சோழன் என புகழப்பெறும் ராஜராஜ சோழனின் வரலாற்றினை சுருக்கமாக அறிந்து கொள்வோம். இரண்டாம் பராந்தக சோழனான சுந்தர சோழனுக்கும் அவன் பட்ட...
-
சிவபிரான் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனைத்தையும் வெவ்வேறு வடிவில் நின்று புரிகிறார் என நால்வர் உட்பட பல...