இந்த பிரபஞ்சத்தை பற்றி எப்ப
டி ஒரு முடிவுக்கு வர முடிவதில்லையோ அவ்வாறே சிவனை பற்றியும் ஒரு முடிவுக்கு வருதலும் மிகவும் சிரமமாகவும். சிவனை அறிந்த உலகம் மூன்று விதமாக அவரை பார்க்கின்றது. சிவம் என்பதற்கு ஒன்றும் இல்லாதது என்று பொருள் கூறுகிறார்கள். சிவனை யோகிகள் ஆதி யோகி என்றும் உலகில் முதன் முதலில் தோன்றியவர் என்றும் பார்க்கின்றனர். சிவன் தான் முதன் முதலில்
யோகங்களை கண்டுபிடித்தவர் என்றும், மனிதனும் இறை நிலைக்கு உயர இவரே வித்திட்டவர் என்றும் சொல்லப்படுகிறது. சிவனை தமிழ் நாட்டு சித்தர்கள் இயற்கையாகவும், பிரபஞ்சமாகவும், இறைவனாகவும் பார்க்கின்றனர். சிவனை பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் முழு முதல் கடவுளாக பாக்கின்றனர். இவரை அனைத்து உலகையும் உயிரையும் படைக்க காரண கர்த்தா என்றும் இவரே அனைவருக்கும் படி அளக்கிறார் என்றும் நம்பப்படுகிறது. இதில் எது உண்மை என்று தெரியாது. ஆனால் ஓம், ஓம் நமசிவாய, சிவ சிவ வார்த்தைகள் ஒருவனுக்கு சிவ தரிசனம் கிடைக்க உதவுகின்றது என்றே நினைக்கின்றேன். ஆம் சிவனை இவ்வுலகில் உள்ள அனைத்து மனிதர்களும் காண முடியும். அதற்கு யோகம்,தியானம், தவம் மற்றும் அவரது பெயர்கள் உதவி செய்கின்றது. சிவன் எங்கும் உள்ளான் உங்கள் உள்ளும் உள்ளான். எது இந்த பிரபஞ்சத்தில் உள்ளதோ அது உன்னுள்ளும் உள்ளது. (அகம் பிரம்மாஸ்மி) நான் தான் இறைவன்/ நான் கடவுள் (அகம் பிரம்மாஸ்மி) நீ எதை தேடுகிறாயோ அதுதான் நீ....நீ அதுவாக இருக்கிறாய் (தத்வமசி). ஆதலால் தான் நம்ம பாட்டி அவ்வை "உடம்பிலே உத்தமனை காண்" என்கிறார். நமது சித்தர்களும் சிவ தரிசனத்தை பெற்றவர்கள் தான். இந்த சிவ தரிசனத்தை தான் இறை தரிசனம், ஒளி தரிசனம், இறை வெளிப்பாடு, அருட்பெரும்ஜோதி என்று பலவாறு குறிப்பிடுகின்றனர். யார் யார் சிவம்....நீ.....நான் சிவம் என்று பாடலும் வந்துவிட்டது. மதத்தை பார்க்காமல் மனிதனை மனிதனாக பார்த்தலே- இறைவனுக்கு செய்யும் மிகப்பெரிய வழிபாடாகும். நீங்கள் எந்த இறைவனையும்,அல்லாவையும், கர்த்தரையும், சாமியையும் கும்பிடாமலும் இறை தரிசனத்தை பெற முடியும். யோகம், ஆன்மீகமே உங்களுக்கு உண்மையான சிவ/இறை தரிசனத்தை காட்டும். உங்கள் நெற்றிகண்ணை திறக்கலாம், ஒளியை காணலாம், நீங்களும் சிவனாகலாம்.உண்மையை உணரலாம். அதற்கு சிவ ராத்திரி உகந்தது என்று கூறப்படுகிறது.
குமரி கண்டம்
சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப...

-
பாரி கடை ஏழு வள்ளல்களில் ஒருவர்.இவர் ஒரு குறுநில மன்னர், வேள் என்ற வம்ச வழி வருபவர்கள். எனவே பாரிவேள் என்று அழைப்பது உண்டு.இவரதுக்காலம் கி....
-
மும்முடிச் சோழன் என புகழப்பெறும் ராஜராஜ சோழனின் வரலாற்றினை சுருக்கமாக அறிந்து கொள்வோம். இரண்டாம் பராந்தக சோழனான சுந்தர சோழனுக்கும் அவன் பட்ட...
-
சிவபிரான் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனைத்தையும் வெவ்வேறு வடிவில் நின்று புரிகிறார் என நால்வர் உட்பட பல...